Friday, April 19, 2024
Home Blog

புதுவருஷ கைவிஷேட சிறந்த நேரங்கள் !

புதுவருஷ கைவிஷேட நேரங்கள் குரோதி வருஷ கைவிஷேட நேரங்களாக வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சித்திரை முதல் நாள் (14/04/2024) ஞாயிற்றுக்கிழமை பகல் 7.57 ல் இருந்து 9.56 வரையிலும் அதே நாள் 9.59 ல் இருந்து 12.01 வரையிலான நேரமும் அதே நாள் ஞாயிற்றுக்கிழமை பகல் மாலை 6.17 ல் இருந்து 8.17 வரையிலான காலமும் மறுநாள் சித்திரை இரண்டாம் நாள் திங்கட்கிழமை பகல் 9.08 ல் இருந்து 9.51 வரையிலான நேரமும் அதே நாள் திங்கட்கிழமை பகல் 9.55ல் இருந்து 10.30 வரையிலான காலமும் கை விஷேடத்திற்குரிய சுப நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குரோதி வருஷம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கைவிஷேட நேரங்களாக சித்திரை 1ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பகல் 10.00 மணியில் இருந்து 11.15 வரையிலான நேரமும் அதேநாள் மாலை 6.30 இல் இருந்து 7.45 வரையிலான நேரமும் சித்திரை 2ம் நாள் திங்கட்கிழமை அதாவது (15.04.2024 )காலை 6.00 ல் இருந்து 7.25 வரையிலான நேரமும் அதே நாள் திங்கட்கிழமை பகல் 9.35 இல் இருந்து 10.35 வரையிலான நேரம் கைவிஷேட நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குரோதி வருஷம் வியாபாரம் செய்தல் புதுக்கணக்கு பதிதல் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சித்திரை 2ம் நாள் (15.04.2024) திங்கட்கிழமை பகல் 9.08 ல் இருந்து 9.51 வரையிலான நேரமும் அதே நாள் திங்கட்கிழமை பகல் 9.55 இல் இருந்து 10.30 வரையிலான நேரமும் சித்திரை 05 அதாவது (18.04.2024 )வியாழக்கிழமை பகல் 10.49 இல் இருந்து 11.50 வரையிலான நேரம் வியாபாரம் செய்வதற்கும் புதுக்கணக்கு பதிவதற்கும் சிறப்பானதாகும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி குரோதி வருஷப்பிறப்பின் வியாபாரம் புது கணக்குப்பதிதல் சித்திரை 2ம் நாள் (15.04.2024) திங்கட்கிழமை பகல் 10.00 ல் இருந்து 11.30 வரையிலான காலமும் சித்திரை 20ம் நாள் (03.05.2024) வெள்ளிக்கிழமை காலை 9.00 இல் இருந்து 10.15 வரையிலான காலமும் சித்திரை 23 (05.05.2024) திங்கட்கிழமை காலை 9.30 இல் இருந்து 10. 40 வரையிலான காலமுமம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வியாபாரம் புதுக்கணக்கு பதிவதற்கான சுப நேரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி மின் கட்டணம் குறைப்பு

மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 14 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.

குறித்த தீர்மானமானது, மின்சாரக் கட்டணத்தை 18 வீதத்தால் குறைக்க முடியும் என்ற எரிசக்தி அமைச்சரின் கூற்றுக்கு முரணாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாடிக்கையாளர் பிரிவினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் திருத்தப்பட்ட கட்டண முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (28) கூட்டம் நடத்திய போதிலும் இறுதி முடிவு எடுக்க முடியாமல் கலைந்து சென்றதுடன் இன்று (29) இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், மின் கட்டண திருத்தம் தொடர்பில் நாளைய தினத்திற்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நிகழ்ந்த சோகம் !

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கனடாவாழ் நபர் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிற்சை பலனின்றி திங்கட்கிழமை (26) உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் மாதகலில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை தந்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை (25) மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (26) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை யாழ் போதனை வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மேலும் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கனடாவில் இருந்து தாயகம் திரும்பியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆவரங்கால் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாய் கடிக்கு இலக்கான நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார்.

மழையே பெய்யாத அதிசய கிராமம் !

உலகத்துக்கே பொதுவானது மழை என்பார்கள். ஆனால், மழையே பெய்யாத ஒரு கிராமமும் இந்த உலகத்தில் இருக்கிறதென்றால், அதிசயம்தான்.

மேற்கு ஆசியாவில், ஏமன் நாட்டின் தலைநகரான சீனாவில் அல்-ஹுதைப் என்றொரு கிராமம் உண்டு. கடும் வறட்சி கொண்ட இந்த கிராமத்தில் இதுவரை மழையே பெய்ததில்லையாம்.

அல்-ஹுதைப் கிராமம் தரை மட்டத்திலிருந்து 3,200 மீட்டர் உயரத்தில், சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் இருக்கிறது.

அதிக உயரத்தில் இருந்தாலும், அந்த இடம் எப்போதும் பகலில் அதிக வெப்பமாகவும் இரவில் பனியும் குளிருமாகவுமே இருக்கும்.

ஆனால், மழைக்கு வாய்ப்பேயில்லை. இந்த கிராமத்தில் நீர் நிலைகள் போதுமானதாக இல்லை. இதனாலும் இந்த பகுதியில் மழை பெய்யாது என கூறப்படுகிறது.

அது மட்டுமன்றி, மழை பெய்யாததற்கு இந்த நிலப்பகுதிக்கு மேலே மேகங்கள் சூழாததும் ஒரு காரணம்.

மேகப் படுக்கைக்கு மேல்தான் ஒரு கிராமமே இருப்பது போன்ற தோற்றம் சில வேளைகளில் தென்படும்.

சாதாரணமாக மழை மேகங்கள், சமவெளியிலிருந்து 2,000 மீட்டர் உயரத்துக்குள் சூழும் ஆனால், இந்த கிராமத்தின் உயரம் 2,000 மீட்டருக்கும் அதிகம் என்பதால் இங்கு மேகங்கள் சூழ வழியில்லை.

அதனால் மேகங்களிலிருந்து வரக்கூடிய மழையும் இந்த நிலத்தில் விழ சாத்தியமில்லை என்பது அறிவியல் உண்மை.

இந்த ஆண்டு மகா சிவராத்திரி நாளில் உருவாகும் அரிய யோகம்!

இந்து மதத்தில் மகா சிவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.

இந்நாளானது சிவபெருமானுக்கு உரிய நாள்.

இந்நாளில் சிவனை நினைத்து விரதமிருந்து இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வணங்கினால், சிவனின் பரிபூர்ண அருளைப் பெறுவதோடு, அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைப்பதுடன், வாழ்வில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும்.

பொதுவாக மகா சிவராத்திரி நாளானது மாசி மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்ததசி திதியில் வரும்.

இந்த ஆண்டு மகா சிவராத்திரி எதிர்வரும் (08.03.2024) ஆம் திகதி வெள்ளிக்கிழமை வருகிறது.

ஜோதிடத்தின் படி, இந்நாளில் மிகவும் அரிதான மற்றும் சிறப்பு வாய்ந்த யோகம் உருவாகிறது.

கனடா செல்ல காத்திருக்கும் மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை !

சட்டவிரோதமாக கனடா செல்ல ஆசைப்படும் யாழ் மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாண மக்களை கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்தத் தகவல் தெரியவந் தள்ளது.

பொலிஸார் எச்சரிக்கை
இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ள பொலிஸார், கனடாவுக்கு அனுப்புவ தாக ஆசைகாட்டி யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை மோசடிகள் தொடர்ச்சி யாக இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

எனவே என் இது தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என வும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த அறிவுறுத்தியுள்ளார்.

பரிதாபாக உயிரிழந்த ஒரு வயதான குழந்தை! யாழ் வைத்தியசாலையில் நடந்த சோகம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் 14 மாதங்களே நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் சாவகச்சேரி – இத்தியடி பகுதியை சேர்ந்த 14 மாதங்களே ஆன ரகுராம் சாந்திரா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

வீபரித முடிவை எடுத்த கணவன்… வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
குறித்த குழந்தை 2 தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தை நேற்றைய தினம் காலை 8 மணியளவில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் குழந்தை உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு !

ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, இன்று திங்கட்கிழமை (05) நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது .

இதன்படி ,காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து, இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் மொத்த விலை பட்டியல்,
காய்ந்த மிளகாய் கிலோ ரூ.870

வெள்ளை சீனி கிலோ ரூ.265

இறக்குமதி செய்யப்படும் உளுந்து கிலோ ரூ.900

பெரிய வெங்காயம் கிலோ ரூ.320

உருளைக்கிழங்கு கிலோ ரூ.120

பருப்பு கிலோ ரூ.295

மன்னார் மாணவன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிர் இழப்பு !

மன்னாரில் கடற்படையின் வாகனத்துடன் மோதி காயமடைந்து சிகிச்சைபெற்று வந்த மாணவன் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மன்னார், மறிச்சுக்கட்டியைச் சேர்ந்த 19 வயதான முஹமட் முத்திஹம் சாத் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கடந்த 31ஆம் திகதி சிலாவத்துறையில், மோட்டார் சைக்கி ளில் மாணவன் பயணித்தபோது எதிரே வந்த கடற்படை வாகனம் திடீரென வலப்பக்கம் திரும்பியதால் விபத்தில் சிக்கியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மரணம், விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.