வீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியமை மற்றும் தன்னிச்சையாக சம்பளத்தை உயர்த்திக் கொண்டமை போன்ற காரணங்களுக்காக மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க உடனடியாகப் பதவி விலக வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுரேன் ராகவன் கோரியுள்ளார்.
சீனாவின் முன்னணி முப்பரிமாண மற்றும் அச்சு இயந்திர தயாரிப்பு நிறுவனமான டெலி, இலங்கையின் அசிடுவா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புதிய கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் துறைமுக வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் துறைமுகக் கொள்கைகளையும் தளவாடச் சூழலையும் மேம்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா எச்சரித்துள்ளார்.
இலங்கையர்களுக்கு தாதி மற்றும் பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட திறன்சார் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் இரு நாடுகளும் தொழிலாளர் ஒப்பந்தம் குறித்து பேசி வருகின்றன.
என்விடியா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஜென்சென் ஹுவாங் மீண்டும் பொறுப்பேற்றதை அடுத்து, அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாடு மீண்டிருந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்னும் 2018 ஆம் ஆண்டு மட்டத்தை விட குறைவாகவே உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சர்வதேச சிங்கப்பூர் பிளாட்ஸ் குறியீட்டுத் தரவுகளின் அடிப்படையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் அடிப்படை ஏற்றுமதிச் செலவு குறைந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் புதிய திட்டமொன்றுக்கு செல்வது குறித்து அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும், இது குறித்து மதிப்பீடு செய்ய பிரதி அமைச்சர் அனில் ஜாந்த தலைமையிலான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுளங்கமுவ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நிலவும் எல் நினோ வானிலை தாக்கம் காரணமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் உயர வாய்ப்புள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார்.
மீனவ சமூகத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள கைபேசி செயலியை விரிவுபடுத்த ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கும் தொனிப்பொருளில் இலங்கை பொருளாதார நிபுணர்களின் 36ஆவது வருடாந்த சர்வதேச மாநாடு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கொழும்பு கோட்டையில் உள்ள கலாநிதி விடுதி நவீனமயமாக்கப்பட்டு நேற்று (22) 'Radisson Blu Hotel Galadari Colombo' என புதிய நாமத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கையின் உள்நாட்டு மேற்குத்துவ மருந்து உற்பத்தி 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளதாக உள்ளநாட்டு மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் தனது இயலுமை மட்டத்திற்கு அருகில் வளர்ந்து வருவதாகவும், நாணயக் கொள்கை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.