இனம், மதம் அல்லது வசிக்கும் இடம் எதுவாக இருந்தாலும் அனைத்து குடிமக்களுக்கும் சமமான தரமான மருத்துவ சேவையை உறுதிப்படுத்தப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இடைக்காலத் தடை உத்தரவை மீறி மருத்துவ நியமனங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பு கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி எல்லைக்குட்பட்ட லிப்ட்டி வட்டவந்திக்கு அருகில் வீதியொன்று தாழ்விறங்கியதை அடுத்து போக்குவரத்து ஒரு பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு வழங்குவதற்காக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் கொழும்பு வடக்கு காதி நீதிபதி மற்றும் பெண் ஒருவர் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மின்சார சபை விவகாரம் தொடர்பான பெரியளவிலான ஊழல் குற்றச்சாட்டு குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னி, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினார்.
பாலியல் வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டு முகாமை முன்னிட்டு கொழும்பு மாநகரசபைக் கட்டிடமும் தாமிர கோபுரமும் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரச் செய்யப்படுகின்றன.
மலையக மக்கள் தமது குடியுரிமையை இழந்து 78 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பு மருதானை சமூக மற்றும் சமத்துவ நிலைய்தில் நாளை (26) நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இந்த வழக்கில் சந்தேகநபராக பெயரிடலாமா என்பது குறித்து விடயங்களை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தோட்டத் திட்டங்கள் மூலம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் ரூ. 4 பில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த தனியார் நிறுவனத்தின் மற்றொரு பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து அழைத்து வரப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியைக் குற்றக் கும்பலுக்கு விற்றுவிட்டுத் தப்பியோடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணியகத்தின் நியமனங்களில் அரசியல் சார்புத்தன்மை உள்ளதாக எதிர்க்கட்சி எழுப்பிய குற்றச்சாட்டுகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நீண்டகால சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படாததைக் கண்டித்து ஆசிரியர், பல்கலைக்கழக கல்விசாரா மற்றும் அரச பல் மருத்துவர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
இரண்டு புதிய பொலிஸ் நாய்க் கூடுகளை அமைப்பதற்காக வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 5.4 மில்லியன் ரூபாய் செலவு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
ஜனவரி மாதம் திரிபோஷா உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட 2,000 மெட்ரிக் தொன் மக்காச்சோளம் அனுமதிக் கோரிக்கைத் தாமதம் காரணமாகத் துறைமுகத்தில் முடங்கியுள்ளது.
மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்தவும் அரச நிதியை வினைத்திறனுடன் முகாமைத்துவம் செய்யவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய வரவுசெலவுத் திட்டம் அரச ஊழியர்களுக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் உரியது என கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் 'அலுத் பியபத்' அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட தாய்லாந்து பிரதிப் பிரதமர், வேலைவாய்ப்புகள் மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுகாதாரப் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, நாட்டின் மருத்துவமனை அமைப்பில் தரமற்ற மருந்துகள் இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.