நெதர்லாந்தில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பரப்பப்படும் போலி ஆவணங்கள் மற்றும் ஏமாற்று வேலைவாய்ப்பு விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தித்வா புயலால் பாதிக்கப்பட்ட அவசாவெல்லை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள களுக்கல் யட்டிபெரிய மண்சரிவு பகுதியை சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யுனெஸ்கோவின் உலக நினைவுக் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பாணந்துறை வாதம் தொடர்பான ஆவணங்களைக் காட்சிப்படுத்துவதற்காகப் பாணந்துறை ரன்கொத் விகாரையில் புதிய கண்காட்சிக் கூடம் திறக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் திட்டப் பகுதியில் 15,00 ஆண்டுகளுக்கு மேலான நெற்செய்கை நிலங்களை வெள்ள அபாயத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பிதவான் கால்வாய் அபிவிருத்தி செய்யப்படுகிறது.
ஹம்பாந்தோட்டைக்கு தெற்கே நடுக்கடலில் சுகவீனம் அடைந்த மீனவர் ஒருவர், கடற்படையினரின் மற்றும் வணிகக் கப்பலின் உதவியுடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டார்.
இலங்கையில் யானை-மனித மோதலைக் குறைப்பதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை முறையை அறிமுகப்படுத்துவது குறித்த கள ஆய்வு கல்கமுவவில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின் நான்கு சேவைப் பிரிவுகளின் கீழ் 223 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கும் அரசாங்கத்தின் சம்பள திருத்தப் பயன்கள் கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
நக்லெஸ் பிரதேசத்தில் பாதுகாப்பற்ற பிரசவத்திற்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்ட 15 வயது சிறுமி மற்றும் பச்சிளங்குழந்தையின் நலனைப் பேண உரிய அதிகாரிகளுக்கு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.