இலங்கை வங்கியின் ஊடாக இணையப் பாதுகாப்பு மாநாட்டிற்கான உத்தியோகபூர்வ பங்காளித்துவம் உறுதி
12வது வருடாந்திர இணையப் பாதுகாப்பு மாநாட்டின் உத்தியோகபூர்வ வங்கியியல் பங்காளியாக இலங்கை வங்கி இணைந்துள்ளது.

60 விநாடிகளில்
- 12வது வருடாந்திர இணையப் பாதுகாப்பு மாநாட்டின் உத்தியோகபூர்வ வங்கியியற் பங்காளியாக இலங்கை வங்கி இணைந்தது.
- நவம்பர் 18 மற்றும் 19 திகதிகளில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் மாநாடு நடைபெறுகிறது.
- செயற்கை நுண்ணறிவு சார்ந்த இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது குறித்த விழிப்புணர்வு வழங்குதல்.
பன்னிரெண்டாவது வருடாந்திர இணையப் பாதுகாப்பு மாநாடு 2026 இன் உத்தியோகபூர்வ வங்கியியல் பங்காளியாக இலங்கை வங்கி (BOC) இணைந்துகொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) ஊடாக எதிர்காலத்தில் எற்படக்கூடிய இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இலங்கையின் நிறுவனங்களைத் தயாரிபப்து இந்த மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.
இதன் பிரத்தியேக தலைமை நிர்வாக அதிகாரி மன்றம் உட்பட மாநாட்டின் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளன. பிராந்தியத்திலுள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இலங்கை வங்கியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான ஆர். எம். என். ஜீவந்த, வாடிக்கையாளர்களின் தரவுப் பாதுகாப்பிற்கு வங்கியியல் கட்டமைப்பில் உயர் முன்னுரிமை வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார். நாளாந்தம் நிதிப் பரிமாற்றங்களைக் கையாளும் நிறுவனம் என்ற வகையில், நவீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பலமான பாதுகாப்பு முறைகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டு ஒப்பந்தம் சிம்கிரா ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பொஷான் தயாரத்ன மற்றும் இலங்கை வங்கியின் உயர் அதிகாரிகளுக்கிடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டது. நவீன தொழில்நுட்பத் தாக்குதல்களின் வேகத்தை எதிர்கொள்ள நிறுவனங்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
மூலங்கள்
கீழ்க்காணும் ஊடகங்களின் அறிக்கைகளின் அடிப்படையில் நியூஸ்லங்கா செய்திப் பிரிவால் மீண்டும் எழுதப்பட்டது.
- Daily FT


