அரச வருமானத்தில் கடன் வட்டி செலுத்தும் சதவீதம் குறைவு
2022ஆம் ஆண்டில் 79.1 சதவீதமாக இருந்த அரசு வருமானத்தின் கடன் வட்டி செலுத்தும் பங்கு, 2026ஆம் ஆண்டளவில் 44 சதவீதமாகக் குறையும் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
60 விநாடிகளில்
- 2022ஆம் ஆண்டில் அரச வருமானத்தில் 79.1 சதவீதம் கடன் வட்டிக்குச் செலவிடப்பட்டது.
- 2026ஆம் ஆண்டுக்கான மதிப்பீடுகளின்படி இந்த சதவீதம் 44 ஆகக் குறையும்.
- அரச வருமானம் 2022இல் 1,979.2 பில்லியன் ரூபாவிலிருந்து 2026இல் 5,951 பில்லியன் ரூபாவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் அரசின் மொத்த வருமானத்தில் கடன் வட்டி செலுத்துவதற்காக ஒதுக்கப்படும் தொகையின் சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. 2022ஆம் ஆண்டில் அரசாங்கம் தனது மொத்த வருமானத்தில் 79.1 சதவீதத்தைக் கடன் வட்டிக்குச் செலவிட்ட நிலையில், 2023ஆம் ஆண்டில் அந்த விகிதம் 80.5 சதவீதமாக உயர்ந்தது.
எனினும், 2024ஆம் ஆண்டில் இந்த நிலை மாறி, அந்த சதவீதம் 66.7 சதவீமாகக் குறைந்தது. 2025ஆம் ஆண்டுக்கான தற்காலிகத் தரவுகளின்படி இந்த விகிதம் மேலும் குறைந்து 45.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன், 2026ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி அது 44 சதவீமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரச வருமானம் படிப்படியாக அதிகரித்து வருவது இந்த நேர்மறையான மாற்றத்திற்குக் முக்கிய காரணமாகும். 2022ஆம் ஆண்டில் 1,979.2 பில்லியன் ரூபாவாக இருந்த மொத்த அரச வருமானம், 2026ஆம் ஆண்டில் 5,951 பில்லியன் ரூபாவாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் கடன் வட்டிக்கான செலவும் 2022இல் 1,565.2 பில்லியன் ரூபாவிலிருந்து 2026இல் 2,617 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், வளர்ந்து வரும் ஒட்டுமொத்த அரச வருமானத்துடன் ஒப்பிடுகையில், கடன் வட்டிச் சுமையின் சதவீதம் இவ்வாறு கணிசமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலங்கள்
கீழ்க்காணும் ஊடகங்களின் அறிக்கைகளின் அடிப்படையில் நியூஸ்லங்கா செய்திப் பிரிவால் மீண்டும் எழுதப்பட்டது.
- Lanka Times
- ITN News


