இலங்கை தொடர்ந்து உயர் வரியைப் பேண வேண்டியதற்கான காரணம் என்ன: பொருளியல் நிபுணர் விளக்கம்

பல தசாப்த கால தவறான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் கடனை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சியைச் சமாளிக்க இலங்கை உயர் வரியைத் தொடர வேண்டும் என்று பொருளியல் நிபுணர் உமேஷ் மொரமுடாலி தெரிவித்துள்ளார்.

60 விநாடிகளில்

  • தவறான பொருளாதாரக் கொள்கைகளைச் சரிசெய்ய உயர் வரி அவசியமானது.
  • 1990 முதல் 2020 வரை தனிநபர் GDP அதிகரித்தபோதிலும், வரி வருவாய் 20% இலிருந்து 8% ஆகக் குறைந்துள்ளது.
  • கடந்த காலக் கடன்களின் சுமை தற்போது நடுத்தர வர்க்கம் மற்றும் தொழில் வல்லுநர்கள் மீது விழுந்துள்ளது.

பல தசாப்த கால தவறான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் கடனால் நிதியளிக்கப்பட்ட வளர்ச்சியைச் சரிசெய்ய இலங்கை அதிக வரிகளைத் தொடர வேண்டியுள்ளது என்று பொருளியல் நிபுணர் உமேஷ் மொரமுடாலி தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் கருத்துத் தெரிவித்த அவர், 1990 க்கும் 2020 க்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் தனிநபர் உள்நாட்டு உற்பத்தி (GDP) மும்மடங்குக்கு மேல் அதிகரித்த போதிலும், வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 20 சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட 8 சதவீமாகக் குறைந்துள்ளது சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் செலவீனங்கள் குறைந்துள்ள அதேவேளையில் கடனின் அளவு அதிகரித்துள்ளதாகவும், இதனால் நாடு கடினமான பொருளாதார சீரமைப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலக் கொள்கைத் தவறுகளுக்கான விலையை இப்போது நடுத்தர வர்க்கத்தினரும் தொழில் வல்லுநர்களும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களின் கடந்த கால வாழ்க்கை முறை மற்றும் கல்வி ஆகியவை கடன் மூலமான செலவீனங்களால் ஓரளவு ஆதரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அந்தச் செலவுகளுக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கான நேரம் இதுவென்று அவர் மேலும் கூறினார்.

மூலங்கள்

கீழ்க்காணும் ஊடகங்களின் அறிக்கைகளின் அடிப்படையில் நியூஸ்லங்கா செய்திப் பிரிவால் மீண்டும் எழுதப்பட்டது.

  • Newswire
இலங்கை தொடர்ந்து உயர் வரியைப் பேண வேண்டியதற்கான காரணம்: நிபுணர் | நியூஸ்லங்கா