விளையாட்டு மூலமாக உதவி கோரிய சிறுமி: அமெரிக்காவில் தாயும் மகனும் மீட்பு
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த சிறுவனும் அவனது தாயும் இணைந்து, இணைய விளையாட்டு மூலம் கிடைத்த தகவலைக் கொண்டு எப்.பி.ஐ. உதவியுடன் காணாமல் போன சிறுமியை மீட்டுள்ளனர்.

60 விநாடிகளில்
- இணைய விளையாட்டு மூலமாக லான்டன் ட்ரெஸ்ப் காணாமல் போன சிறுமியைத் தொடர்பு கொண்டார்.
- அவனது தாயான கிறிஸ்டினா சொத்து ஆவணங்களை ஆய்வு செய்து சந்தேகத்திற்கிடமான வீட்டைக் கண்டறிந்தார்.
- எப்.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் தாயின் துரித நடவடிக்கையால் 24 மணி நேரத்திற்குள் சிறுமி மீட்கப்பட்டார்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வசிக்கும் 16 வயதுடைய லான்டன் ட்ரெஸ்ப் என்ற சிறுவன் இணைய விளையாட்டு ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது ஒரு சிறுமியின் நட்பு அவனுக்குக் கிடைத்தது. அந்த விளையாட்டின் ஊடாகப் பேசிய இருவரும் ஒருவருக்கொருவர் பழகிய நிலையில், தான் வீட்டைவிட்டு ஓடிவந்துள்ளதாகவும் மற்றொருவரால் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் சிறுமி கூறியுள்ளார்.
ஓராண்டுக்கும் மேலாகக் காணாமல் போயிருந்த 17 வயதுடைய அந்தச் சிறுமி தான் இருக்கும் சரியான இடம் தெரியாமல் ஒரிகான் மாகாணத்தில் இருப்பதாக மட்டும் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவலால் அதிர்ச்சியடைந்த லான்டன், நதியாகவும் ஐந்து குழந்தைகளின் தாயாகவும் பணிபுரியும் தனது 41 வயது தாயான கிறிஸ்டினாவிடம் கடந்த அக்டோபர் 31ஆம் திகதி இதுபற்றித் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தாயும் மகனும் இணைந்து அந்தச் சிறுமியிடம் இருந்து மேலும் பல விவரங்களைச் சேகரித்தனர். வரி ஆவணங்கள் மற்றும் சொத்துப் பதிவுகளை ஆன்லைன் மூலம் ஆய்வு செய்த கிறிஸ்டினா, சந்தேகத்திற்கிடமான வீட்டின் முகவரியைக் கண்டறிந்து அதனைச் சிறுமியின் உறுதிப்படுத்தலுக்காக அனுப்பினார்.
பின்னர் அமெரிக்கக் பெடரல் புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ. அதிகாரிகளுக்கும், காணாமல் போன சிறுமியின் தாய்க்கும் தகவல் வழங்கப்பட்டு விரைவான நடவடிக்கையின் மூலம் அந்தச் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூலங்கள்
கீழ்க்காணும் ஊடகங்களின் அறிக்கைகளின் அடிப்படையில் நியூஸ்லங்கா செய்திப் பிரிவால் மீண்டும் எழுதப்பட்டது.
- Gagana
