2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 40% செயற்படுத்தப்படவில்லை

வெரிடே ரிசேர்ச் அமைப்பின் புதிய மதிப்பீட்டின்படி, 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் உயர் மதிப்புடைய முன்மொழிவுகளில் சுமார் 40 சதவீதம் இன்னும் முழுமையாகச் செயற்படுத்தப்படவில்லை.

Hiru News

60 விநாடிகளில்

  • 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள 36 முக்கிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
  • இவற்றில் சுமார் 40 சதவீதமான முன்மொழிவுகள் குறிப்பிடத்தக்க அளவில் செயற்படுத்தப்படவில்லை.
  • முழுமையாக நிறைவேற்றப்பட்ட முன்மொழிவுகளின் வீதம் 2017ஆம் ஆண்டுக்குப் பின் பதிவான உச்ச அளவான 33 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • போதுமான தரவுகள் இல்லாததால் 7 முன்மொழிவுகள் வெளிப்படுத்தப்படாதவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்த புதிய ஆய்வறிக்கையை வெரிடே ரிசேர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கை வாக்குறுதிகள் மற்றும் நிதிப்பொறுப்புக்கூறலை ஆராயும் இந்த மதிப்பீட்டின் மூலம் பல முக்கிய உண்மைகள் வெளிவந்துள்ளன.

இந்த ஆய்வானது தலா 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள 36 முக்கிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மொத்தம் 212 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இவற்றுள் 14 முன்மொழிவுகள் அதாவது கிட்டத்தட்ட 40 சதவீதமானவை குறிப்பிடத்தக்க அளவில் நிறைவேற்றப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், கடந்த 2024ஆம் ஆண்டில் 17 சதவீதமாக இருந்த முழுமையாக நிறைவேற்றப்பட்ட முன்மொழிவுகளின் சதவீதம், 2025இல் 33 சதவீதமாக அதிகரித்துள்ளது. வெரிடே ரிசேர்ச் நிறுவனம் தனது மதிப்பீடுகளை 2017இல் ஆரம்பித்ததிலிருந்து பதிவான மிக உயர்ந்த நிறைவேற்று வீதம் இதுவாகும். அதற்கமைய 15 முன்மொழிவுகள் முழுமையாகவோ அல்லது குறிப்பிடத்தக்க அளவிலோ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

பெப்ரவரி மாதத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதால் முன்மொழிவுகளைச் செயற்படுத்தவ வழமைபோல் அதிக அவகாசம் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், மேலும் 7 முன்மொழிவுகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்குப் போதுமான தரவுகள் இல்லாத காரணத்தினால் அவை வெளிப்படுத்தப்படாத பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மூலங்கள்

கீழ்க்காணும் ஊடகங்களின் அறிக்கைகளின் அடிப்படையில் நியூஸ்லங்கா செய்திப் பிரிவால் மீண்டும் எழுதப்பட்டது.

  • Hiru News
2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 40% செயற்படுத்தப்படவில்லை | நியூஸ்லங்கா